விலைவாசி உயர்வுக்கு எதிராக அ.தி.மு.க. போராட்டம் - பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட தக்காளி

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு அ.தி.மு.க.வினர் சார்பில் இலவச தக்காளி வழங்கப்பட்டது.;

Update:2023-07-20 19:30 IST

நாகர்கோவில்,

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அரசு துறைகளில் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அ.தி.மு.க. சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு அ.தி.மு.க.வினர் சார்பில் இலவசமாக தக்காளி வழங்கப்பட்டது. அந்த இலவச தக்காளிகளை பெறுவதற்கு பெண்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். சில பெண்களுக்கு இலவச தக்காளிகள் கிடைக்காததால் அவர்கள் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்