விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-14 18:16 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் அருணாசலம் தலைமை தாங்கினார். ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிமுத்து, மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் ராஜா, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் கலையரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்