விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-20 16:31 GMT

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தேனி பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான கோகுலஇந்திரா தலைமை தாங்கி பேசினார்.

இதில் அமைப்புச் செயலாளர் ஜக்கையன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது விலைவாசி உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஏராளமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், எந்த விளம்பர பேனரிலும் அமைப்புச் செயலாளர் ஜக்கையன் புகைப்படம் இடம்பெறவில்லை. உள்கட்சி பிரச்சினை காரணமாக விளம்பர பேனர் வைத்த நிர்வாகிகள், ஜக்கையன் புகைப்படத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது அ.தி.மு.க. தொண்டர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்