தருமபுரி மாவட்டத்தில் 21 இடங்களில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்-அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

Update: 2022-12-07 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேந்திரன், செண்பகம் சந்தோஷ், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.

கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சொத்து வரி, வீட்டு வரி, கடை வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும் தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) 10 பேரூராட்சிகளிலும், 13-ந் தேதி தர்மபுரி நகரிலும், 14-ந் தேதி அனைத்து ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பழனி, வேலுமணி, விஸ்வநாதன், கோபால், செந்தில், செல்வராஜ், மதிவாணன், செந்தில்குமார், சேகர், முருகன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், அருள், தனபால், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்