இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.;

Update: 2022-07-11 16:42 GMT

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை கொண்டாடும் விதமாக குத்தாலம் அருகே அரையபுரம் கடைவீதியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதற்கான நிகழ்ச்சியில் அரையபுரம் கிளை செயலாளர் அய்யாறு, ஊராட்சி மன்ற தலைவர் தேவகி சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்