அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அ.தி.மு.க.வினர் அஞ்சலி
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் நேற்று சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் 4 ரோடு அருகே உள்ள அண்ணா பூங்கா முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர். அவர்களில் பலர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.
பின்னர் அண்ணா பூங்கா மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நிர்வாகிகள் மாலைஅணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் புகழ் ஓங்குக என்று கோஷமிட்டனர்.
கலந்து கொண்டவர்கள்
இதையடுத்து மணிமண்டபத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்திரன், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள் மாரியப்பன், பாலு, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வேபிரிட்ஜ் ராஜேந்திரன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி மாநகரில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் அவரது உருவப்படத்துக்கு மாலையிட்டு மலர் தூவிஅஞ்சலி செலுத்தினர்.
ஏத்தாப்பூர்
ஏத்தாப்பூர் பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அ.தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கட்சியின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஏழை எளியவர்களுக்கு நல உதவிகள் வழங்கினர். இதில், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு துணைத்தலைவரும், கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணைச்செயலாளர் வாசுதேவன், ஏத்தாப்பூர் நகர செயலாளர் ராஜமாணிக்கம், பெத்தநாயக்கன்பாளையம் நகர செயலாளர் செல்வம், பெத்தநாயக்கன்பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.