எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் 2023-24ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சினைகள், உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.