அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சிதம்பரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-04-30 19:32 GMT

பரங்கிப்பேட்டை,

கடலூர் கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.எஸ்.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகர செயலாளர் ஆர்.செந்தில்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது, மகளிர் குழுக்கள், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் மாவட்ட பொருளாளர் தோப்பு கே.சுந்தர், இணை செயலாளர் எம்.ரெங்கம்மாள், துணை செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கோவி.ராசாங்கம், அசோகன், சுந்தரமூர்த்தி, ஜோதிபிரகாஷ், நவநீதகிருஷ்ணன், சிவக்குமார், வாசு.முருகையன், பாலகிருஷ்ணன், ஒன்றிய குழு துணை தலைவர் வாசுதேவன், மாவட்ட பிற அணி செயலாளர்கள் பாசறை டேங்க் ஆர்.சண்முகம், இலக்கிய அணி தில்லை கோபி, விவசாய பிரிவு குணசேகரன், கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஜெயலலிதா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்