அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

Update: 2023-07-27 18:45 GMT

சிவகாசி, 

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு பின்னர் அ.தி.மு.க.வின் முதல் மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 20-ந் தேதி நடக்கிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாநாடு ஆயத்த கூட்டங்கள் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள ஜா போஸ் திருமண மண்டபத்தில் அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடக்கிறது. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.பி. வளர்மதி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா, இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் மற்றும் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மதுரை மாநாடு தொடர்பான ஆலோசனைகளை வழங்க உள்ளனர். இதில் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட, மாநகர், நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்