அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் - பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார்...!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார்.

Update: 2023-09-13 04:44 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். அவர் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, ஒரேநாடு ஒரேதேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாஜக தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்