திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று காலை திருப்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவை தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். விஜயகுமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். பின்னர் சென்னையில் நடக்கும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டத்திலிருந்து பங்கேற்கும் 35 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
முடிவில் மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் நன்றி கூறினார். கூட்டத்தில் இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என். நடராஜ், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கருணாகரன், திலகர் நகர் சுப்பு, ஹரிஹரசுதன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வக்கீல் பிரிவு செயலாளர் முருகேசன், நிர்வாகி ஆண்டவர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.