விபத்தில் சிக்கிய அ.தி.மு.க. தொண்டருக்கு நிதி உதவி
விபத்தில் சிக்கிய அ.தி.மு.க. தொண்டருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
வள்ளியூர் (தெற்கு):
மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாட்டில் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாநாடு முடிவடைந்து ஊருக்கு திரும்பி வரும் வழியில் திருமங்கலம் பகுதியில் கூடங்குளத்தை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் சுயம்புலிங்கம் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். அவருக்கு மதுரை திருமங்கலத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்தை முன்னாள் எம்.பி.யும், மாவட்ட பொருளாளருமான சவுந்திரராஜன் கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சுயம்புலிங்கத்திற்கு ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலா ராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.