அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
சுரண்டையில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
சுரண்டை:
சுரண்டை நகர அ.தி.மு.க. சார்பில் காமராஜர் வணிக வளாகம் மற்றும் கீழச்சுரண்டை பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு நகர செயலாளர் வி.கே.எஸ்.சக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளருமான செல்வமோகன்தாஸ் பாண்டியன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழச்சாறு மற்றும் மோர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுரண்டை நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் சிவசங்கர், புஷ்பம், ஆடிட்டர் முத்துராஜ், கவுன்சிலர் வசந்தன், பொன்ராணி ஜெபராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.