விளாத்திகுளத்தில் அ.தி.மு.க. பொதுக் கூட்டம்

விளாத்திகுளத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

Update: 2022-09-26 18:45 GMT

எட்டயபுரம்:

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விளாத்திகுளத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் விளாத்திகுளம் பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து இசைமேதை நல்லப்ப சுவாமிகளின் 134-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி, நீலகண்டன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்