திருச்செந்தூரில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
திருச்செந்தூரில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் கீழரத வீதியில் உள்ள மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், நகர துணை செயலர்கள் செல்வசண்முகசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு வரவேற்று பேசினார். தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விவரப்பட்டியலை நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், முன்னாள் ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர் நன்றி கூறினார்.
மேலும், நாசரேத் அ.ம.மு.க நிர்வாகி கிருபாகரன். இவர் அந்த கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அப்போது, அ.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், ஆத்தூர் பேரூராட்சி கழக செயலாளர் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.