நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் - மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அறிவுறுத்தினார்.;

Update: 2023-10-15 14:05 GMT

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது. பூத் கமிட்டி பணியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனி கவனம் செலுத்தி உள்ளார். அவருடைய உத்தரவுக்கு இணங்க வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பூத் கமிட்டி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

அவரது தலைமையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் அ.தி.மு.க. வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரியை வெற்றியை பெற வேண்டும். வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, அதனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பெருமையுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது. இளைஞர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி விட்டதுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட நிர்வாகிகள் ஏ.கணேசன், டி.ஜனார்த்தனன், ஆர்.சிவகுமார், கே.மகேந்திரன், அருண்பிரசாத், எல்.எஸ்.மகேஷ்குமார், ஜெஸ்டின், பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்