மேலப்பாளையத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சிறப்பு பிரார்த்தனை

மேலப்பாளையத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

Update: 2022-08-11 21:26 GMT

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 68-வது பிறந்த நாளையொட்டியும், தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டியும், அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டில், 68 பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லை மேலப்பாளையம் ரிபாஈ தர்காவில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, கவுன்சிலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேட்டை முகைதீன் மீரா சாகிப் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலப்பாளையம் ரிபாஈ தர்காவில் கந்தூரி விழா நடந்தது. இதையொட்டி மாலையில் கொடி, சந்தனகுடம் ஊர்வலம் நடந்தது. இரவில் பக்தி சொற்பொழிவுகள் மற்றும் சிறப்பு துவா நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்