மதுரை ஆவினில் அ.தி.மு.க. ஆட்சியில் நியமித்த 47 பேர் பணி நீக்கம்-தேர்வுக்குழு மீதும் ஒழுங்கு நடவடிக்கை

மதுரை ஆவினில் அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 47 ேபர் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தேர்வுக்குழு மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது

Update: 2023-01-04 20:36 GMT


மதுரை ஆவினில் அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 47 ேபர் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தேர்வுக்குழு மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது

ஆவினில் பணி நியமனம்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது மதுரை ஆவினில் 61 பணியாளர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த பணியாளர்கள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாகவும்,, அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியது. இதுதொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை குழுவினர், பல கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காமல் இருந்ததும், ஒரு கிராமத்தை சேர்ந்த 17 பேருக்கு பணி நியமனம் வழங்கியதும், கேள்வித்தாள்களை தேர்வுக்கு முன்னரே வெளியிட்டது என பல முறைகேடுக்கான ஆதாரங்கள் சிக்கின.

ஒழுங்கு நடவடிக்கை

இது தொடர்பான அறிக்கை, ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் வழங்கப்பட்டது.

அவர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து, நியமனம் செய்யப்பட்ட, 61 பேரில் 47 பேரின் நியமனங்களை, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81-ன் கீழ் ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

அதன்படி மேலாளர்கள், முதுநிலை பணியாளர்கள், துணை மேலாளர்கள் உள்பட 47 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது ஆவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய பெண் அதிகாரி மற்றும் தேர்வுக்குழு மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்