கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-22 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகர அ.தி.மு.க சார்பில் மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கச்சேரி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் பாபு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அழகுவேல்பாபு, பிரபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, கழக அமைப்பு செயலாளர் மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்