மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-05-02 18:55 GMT

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட கவுன்சிலர்களிடம் கலந்தாலோசிக்காமல் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அ.தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டுகளில் எந்த பணிகளும் நடைபெறாமல் புறக்கணிக்கப்படுவதாகவும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சிவசாமி, பாண்டியன், மணிகண்டன் ஆகியோர் குற்றம் சாட்டினர். மேலும் சம்பிராதாயத்திற்கு கூட்டம் நடத்துவதாகவும், கூட்டத்தினால் எந்த பயனும் இல்லை எனவும் கூறி கூட்டத்தை புறக்கணித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்