9 இடங்களில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து 9 இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
விலைவாசி உயர்வை கண்டித்து 9 இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, தளவாய்புரம், கீழராஜகுலராமன், கூமாபட்டி, மம்சாபுரம், காரியாபட்டி, சேத்தூர் ஆகிய 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, ஆவின் பால் விலை, சொத்து வரி, தொழில் வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வினால் சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்கட்டண உயர்வு
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த விலைவாசியும் உயர்த்தப்படவில்லை. குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரியையும் உயர்த்தி உள்ளனர். மின் கட்டண உயர்வு குறித்து தெரியாமல் இருப்பதற்காக மாதத்திற்கு 6 நாட்கள் மின்சாரத்தை நிறுத்தி விடுகின்றனர்.
தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.