அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தருவையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-03-11 18:44 GMT

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தருவையில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை என்.கணேசராஜா தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் சி.முத்துக்குட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர்கள் சோழவேந்தன், நடராஜன் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி வி.நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய செயலாளர் சி.முத்துக்குட்டி பாண்டியன் ஏற்பாட்டில் ஏழைகளுக்கு இலவச தையல் எந்திரம், இஸ்திரிபெட்டி, வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் தச்சை என்.கணேசராஜா வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்