அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பெத்தநாடார்பட்டியில் நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பெத்தநாடார்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட இணைச் செயலாளர் முத்துலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், பாலகிருஷ்ணன், அருவேல்ராஜ், முருகேசன், பேரூர் செயலாளர் கார்த்திக் குமார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.