அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.;
மேலப்பாளையம் பஜார் திடலில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஜெகநாதன் என்ற கணேசன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன், தலைமை கழக பேச்சாளர் பலகுரல் சந்தானம் ஆகியோர் பேசினார்கள்.