அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

காரைக்குடி புதுவயல் பகுதியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-21 18:45 GMT

காரைக்குடி, 

அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி காரைக்குடி தொகுதி அ.தி.மு.க. சார்பில் புதுவயல் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் நரிவிழி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மெய்யப்பன், செந்தில்நாதன், மாசான், சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லாகணேசன், நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட இணை செயலாளர் கற்பகம்இளங்கோ, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகாமுனியசாமி, நடிகர் விஜய்கணேஷ், தலைமை கழக பேச்சாளர் சேகர் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் சாக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ராமச்சந்திரன், தேவிமீனாள்மகேந்திரன், யசோதா, தமிழ்ச்செல்வி மற்றும் சாக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்