அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைக்க விண்ணப்பங்கள் வினியோகம்
நெல்லையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைக்க விண்ணப்பங்கள் வினியோகம் நடந்தது.
நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைக்க விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பூத் கமிட்டி அமைப்பதற்கான விண்ணப்பங்களை பகுதி செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர்களிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் நெல்லை தொகுதி பொறுப்பாளர் கல்லூர் வேலாயுதம், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.