அ.தி.மு.க. சார்பில் 29-ந் தேதி ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் 29-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Update: 2023-05-26 19:14 GMT

ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, இரண்டாண்டு தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் தொடரும் ஊழல், முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் உயிரிழப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம், ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 9 மணியளவில் ராணிப்பேட்டை, முத்துக்கடை பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட பிற அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய பிற அணி நிர்வாகிகள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்றத்தலைவர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிளை செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்