ஆலங்குளத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
ஆலங்குளத்தில் மின்கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம்:
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து ஆலங்குளம் வேன் ஸ்டாண்ட் அருகில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜ், பேரூராட்சி துணை தலைவர் ஜான்ரவி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் சாலமோன் ராஜா, நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, நிக்சன், செந்தில், பவுல்ராஜ், கருப்பசாமி, முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.