திருச்சியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

திருச்சியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-09-16 18:45 GMT

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மண்ணச்சநல்லூரிலும், புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் திருச்சி பொன்மலை மேலகல்கண்டார்கோட்டை பெரியார் திடலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்