மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்தும், இவற்றை வாபஸ் பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சம்பத், வி.கே.ஆர்.சீனிவாசன் மற்றும் வி.கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்களும், மோகன் உள்ளிட்ட நகர செயலாளர்களும், பேரூராட்சி செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு, பதாகைகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார் நன்றி கூறினார்.