அ.தி.மு.க. நகர செயலாளரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

அ.தி.மு.க. நகர செயலாளரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2022-10-09 21:05 GMT

ஓமலூர்:

ஓமலூர் கடைவீதி பஜார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். அ.தி.மு.க. நகர செயலாளர். இவர், தனது வீட்டின் காம்பவுண்டுக்குள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். ஆனால் கேட்டை பூட்டாமல் இருந்துள்ளார். மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. இதேபோல் ஓமலூரை அடுத்த காமலாபுரம் தர்மபுரி மெயின் ரோடு பகுதி சேர்ந்த மணிகண்டன் (30) என்பவருக்கு சொந்தமான காரையும் மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரிலும் ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்