திருச்செந்தூரில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

திருச்செந்தூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.;

Update: 2023-03-29 18:45 GMT

திருச்செந்தூர்:

அ.தி.மு.க. பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு திருச்செந்தூர் இரும்பு ஆர்ச் பகுதியில் அ.தி.மு.க. நகர செயலாளர் மகேந்திரன் தலைமையில், அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, நகர துணை செயலாளர் செல்வ சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி நகர அ.தி.மு.க. செயலாளர் பி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் ஆறுமுகநேரி பஜாரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். அப்போது பஸ்களில் பயணித்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் கனகராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்