அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் சங்க கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரா.ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். இணைச் செயலாளர் சி.பாண்டியன் வரவேற்றார். சாமி.பழனி, ஓய்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வக்கீல்கள் தமிழ்ச்செல்வன் சக்தி, வி.கே.ஆனந்தன், ஆர்.ஆர்.மனோகரன், டெல்லி பாபு, ஜோசப் பெலிக்ஸ், முகமது பிலால் உள்பட பலர் பேசினார்கள். இதில் ஏராளமான வழக்கறிஞர் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் பால மணவாளன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் மாவட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் பங்கேற்பது எனவும், திருப்பத்தூரில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.