அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணனின் மகன் கோபி என்ற கோவிந்தராஜ்(வயது 32). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த 7-ந் தேதி துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரன், கமலவேணி, சந்திரமோகன் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கில் கருப்பு என்ற அமீது, வேலு என்ற மாஞ்சா வேலு என்ற ராஜதுரை, கொலை குற்றத்திற்கு திட்டம் வகுத்து கொடுத்த ரவி போஸ்கோ ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திருவானைக்காவல் ஒத்த தெருவை சேர்ந்த ராஜ்குமாரின் மகன் கிருஷ்ணகுமாரை(24) நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.