தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. கவுன்சிலர்

நத்தம் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்.

Update: 2023-08-07 20:00 GMT

நத்தம் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் பெசலி சின்னடைக்கண். இவர்,  அ.தி.மு.க.வில் இருந்து விலகி முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார். அப்போது கவுன்சிலருடன், அவரது ஆதரவாளர்கள் சிலரும் தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் நத்தம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் குடகிப்பட்டி அழகர்சாமி, ராமன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் பிரசாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்