அ.தி.மு.க. மாநாட்டில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-07-14 18:45 GMT

மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது.

மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் வீ.கருப்பசாமி பாண்டியன், ஏ.கே.சீனிவாசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாப்புலர் முத்தையா ஆகியோர் பேசினார்கள்.

40 தொகுதிகளில் வெற்றி பெற...

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கு நன்றி தெரிவிப்பது. வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) தி.மு.க. அரசின் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடத்த உள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது. பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், துணை செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் சவுந்தர்ராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட இளைஞர் அணி பால்துரை, மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், கவுன்சிலர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், கே.பி.கே.செல்வராஜ், அந்தோணி அமலராஜா, வக்கீல் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்