கடையநல்லூரில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா

கடையநல்லூரில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.;

Update: 2023-10-17 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு விழா நகரச் செயலாளர் எம்.கே.முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். விழாவில் முன்னாள் நகர செயலாளர் கிட்டு ராஜா, ராஜேந்திர பிரசாத், சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை செயலாளர் மைதீன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்