அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா
திருச்செங்கோட்டில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
எலச்சிபாளையம்:-
அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழா திருச்செங்கோடு தோக்கவாடி வரப்பாளையம் பகுதியில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும், கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்லப்பன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அணிமூர் மோகன், எஸ்.ஆர்.எம்.டி.சந்திரசேகர், மாவட்ட துணை தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.