அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கவிழா

அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது.

Update: 2022-10-17 19:25 GMT

அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ஜி.ரங்கநாதன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், நகரமன்ற உறுப்பினர் டி.டி.சி.சங்கர், ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லீலாசுப்பிரமணியம், தம்பா கிருஷ்ணன், நகரமன்ற உறுப்பினர் எம்.எம்.எஸ்.சதீஷ், துணை செயலாளர் ஆனந்தன், தாஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி டி,எம்.ரவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்