காலியிடங்களை நிரப்ப மாணவர் சேர்க்கை
நாகை, செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியிடங்களை நிரப்ப மாணவர் சேர்க்கை நடக்கிறது
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், மற்றும் செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக நேரடி மாணவர் சேர்க்கைக்கு கால நீ்ட்டிப்பு நாளை(வௌ்ளிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே தகுதியான மாணவ- மாணவிகள் மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அந்தந்த தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்று சேர்க்கை விவரங்களை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04365-250129 மற்றும் 04369-276060 ஆகிய தொைலபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.