கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-06 18:45 GMT


இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 27 பள்ளி மாணவர் விடுதி, தொழிற்பயிற்சி மாணவர் விடுதி-1, பள்ளி மாணவியர் விடுதி-11, ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி-1 உள்பட 40 விடுதிகள் உள்ளது. இந்த விடுதிகளில் (2023-2024) -ம் கல்வியாண்டிற்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி விடுதிகளில் தங்கி பயில விருப்பம் உள்ள அனைத்து மாணவ, மாணவி களுக்கும் உணவு, உறைவிடமும், 4 இணை சீருடைகளும் இலவசமாக வழங்கப்படும்.

ரூ.2½ லட்சத்துக்குள் ஆண்டு வருமானம்

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும். விடுதிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் விடுதியில் சேர்த்துக்கொள்ளப்படுவர். மாணவர்கள் இருப்பிடத்திலிருந்து பள்ளிக்கு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இது மாணவியர்களுக்கு பொருந்தாது.

30-ந்தேதி வரை...

பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விடுதி மேலாண்மை செயலியின் மூலம் https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது விடுதி காப்பாளர்கள் உதவியுடனோ இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்