விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 13, 14 ஆகிய தேதிகளில் நடக்கிறது

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் நடக்கிறது.;

Update: 2022-09-09 17:13 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 13-9-2022 மற்றும் 14-9-2022 ஆகிய தேதிகளில் நடைபெறஉள்ளது. 13-ந்தேதி செவ்வாய்க்கிழமை அன்று கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினிஅறிவியல் போன்ற அறிவியல் பிரிவுகளில் தர மதிப்பெண் 230-க்கு மேல் எடுத்த மாணவர்களுக்கும், 14-ந்தேதி புதன்கிழமை அன்று வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிகநிர்வாகம் போன்ற பிரிவுகளில் தரமதிப்பெண் 175-க்கு மேல் எடுத்த மாணவர்களுக்கும், தமிழ் பாடத்தில் 80 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தவர்களுக்கும், ஆங்கில பாடத்தில் 50 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்த மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். சுழற்சி 2-ல் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் கோ.ராஜவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்