மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்

சுரண்டை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.

Update: 2023-06-10 19:00 GMT

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான 2-வது கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி முதலாம் ஆண்டு இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், கணிதம் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 12-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

வணிக நிர்வாகவியல் (பி.பி.ஏ.) மற்றும் வணிகவியல் (பி.காம்) பொருளியல், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 13-ந் தேதி நடக்கிறது. எனவே விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் அனைவரும் மேற்குறிப்பிட்ட நாட்களில் தங்களது 10-ம் வகுப்பு சான்றிதழ், பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், விண்ணப்பித்த படிவம் அசல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை அசல் மற்றும் 5 நகல்களுடன் காலை 9 மணிக்குள் கல்லூரி வளாகத்திற்கு வந்து வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் தங்கள் தரவரிசை பட்டியல் விவரங்களை www.kgac.ac.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த தகவலை சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் இரா.சின்னத்தாய் தெரிவித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்