வந்தவாசியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்
வந்தவாசியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார வாகனம் மூலம் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. முகாமுக்கு நகர்மன்ற உறுப்பினர் ம.கிஷோர்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆக்னஸ் ராஜகுமாரி, பிரியா ஆகியோர் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர். பள்ளி ஆசிரியை கண்மணி நன்றி கூறினார்.
முகாமின்போது, பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.