குத்தாலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 3-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

குத்தாலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 3-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க உள்ளது.

Update: 2022-08-22 17:17 GMT

குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், பி.காம்., பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான 3-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வின் போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும். சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அன்றே கல்லூரியில் கட்டணமாக ரூ.3,350 செலுத்தி சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்