திருக்கோவிலூரில் அ தி மு க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து திருக்கோவிலூரில் அ தி மு க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-25 17:27 GMT

திருக்கோவிலூர்

மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருக்கோவிலூர் பஸ் நிலையம் எதிரே நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. காமராஜ், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிரபு, அழகுவேல் பாபு, மாவட்ட வர்த்தக அணி தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் என்.சேகர், எஸ்.கே.டி.சி.ஏ.சந்தோஷ் ஆகியோர் வரவேற்றனர்.

இதில் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்தின் மாநில தலைவர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, பழனிச்சாமி, இளங்கோவன், தனபால் ராஜ், மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, மாணவரணி தலைவர் வக்கீல் பார்த்திபன், திருக்கோவிலூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் விநாயகமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் பழனி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்