உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

விருதுநகர் அருகே நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் விவசாயிகளின் ஆட்சேபனையால் ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2023-02-04 18:45 GMT

விருதுநகர் அருகே நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் விவசாயிகளின் ஆட்சேபனையால் ஒத்தி வைக்கப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

விருதுநகர் மாவட்டத்விருதுநகர் அருகே நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் விவசாயிகளின் ஆட்சேபனையால் ஒத்தி வைக்கப்பட்டது.ல் 1800 விவசாயிகளை உறுப்பினராக கொண்ட விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விவசாயிகளிடமிருந்து சிறு தானியங்களை கொள்முதல் செய்து மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தி வருகிறது. இதில் உறுப்பினராக உள்ள விவசாயிகள் 6-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் விருதுநகர் அருகே உள்ள மேலதுலுக்கன் குளத்தில் நடைபெற்றது. நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் தலைமையிலும், துணை தலைவர் கணேசன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் உத்தாண்டராமன், வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) ரமேஷ் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இதில் விவசாய உற்பத்தி குழுவின் இயக்குனர்கள், நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரூ.12 லட்சம் பங்குத்தொகை வழங்குவதாக விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆட்சேபனை

அப்போது நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பங்குதாரரான விவசாயிகள் சிலர் விவசாயிகளிடமிருந்து குறைந்த அளவே சிறுதானியங்கள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், பல முறைகேடுகள் நடப்பதாகவும், கூட்டம் நடத்துவது குறித்து முறையாக அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், 5 முறை பொதுக்குழு கூட்டம் நடந்ததாக கூறப்படும் நிலையில் ஒருமுறை கூட முறையாக கூட்டம் நடத்தப்படவில்லை என்றும், பொது குழுவில் குறைந்த பட்சம் 600 உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டிய நிலையில் குறைந்த அளவே உறுப்பினர்கள் கலந்து கொண்டதால் தலைவர் மற்றும் இயக்குனர்கள் பதவி நீட்டிப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்றும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

தொடர்ந்து வேளாண் இணை இயக்குனர், துணை இயக்குனர் ஆட்சேபனை தெரிவித்த விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போதிய உறுப்பினர் வருகை இல்லாததால் பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் வேளாண் இணை இயக்குனர் தெரிவித்தார். பின்னர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்