சுண்ணாம்புக்கல் குவாரி தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
புதுப்பாளையம் கிராமத்தில் நடைபெற இருந்த சுண்ணாம்புக்கல் குவாரி தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதுப்பாளையம் சுண்ணாம்புக்கல் மற்றும் சுண்ணாம்பு கன்கர் குவாரிக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கும், நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கும், புல எண்.173 புதுப்பாளையம் கிராமம், திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை ஈஸ்வரன் கோவில் ஏரி எதிர்புறம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் சில நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டம் நடக்கும் தேதி பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.