ஆதிவாசி மர்ம சாவு
ஆதிவாசி மர்மமாக இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் குள்ளன் (வயது 53). இந்தநிலையில் ஆதிவாசியான இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், தினேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே குள்ளன் கொலை செய்யப்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.