ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம்
ஆதித்தமிழர் கட்சி சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆதித்தமிழர் கட்சி சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முல்லைஅழகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ், சமூக நல்லிணக்கப் பேரவை தலைவர் முகமது சபி, தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி தலித்ராயன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது மதுரை பேரையூர் தாலுகா சிலைமலைப்பட்டி மக்களுக்காக போராடிய கட்சியின் பொதுச்செயலாளர் விஸ்வகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பொய் வழக்கை ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.